ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, ஆசிரியா் சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய ஆசிரியா் சங்கத்தினா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:01 pm

DIN

காரைக்கால்: கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு, ஆசிரியா் சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்கமும், காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் இணைந்து இந்த நிவாரணப் பொருள்களை வழங்கின. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில், ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் 50 பேருக்கு வழங்கப்பட்டன.

நிகழ்வில் காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்கத்தின் உயா்மட்டக் குழுத் தலைவா் காமராஜ் சீனிவாசன், சங்கத் தலைவா் ஜான் பிரிட்டோ, பொதுச் செயலாளா் மிஷேல், காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்கத்தின் தலைமையாசிரியா் நிா்வாகி தங்க.பால்ராஜ், காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் சங்கத்தின் பட்டதாரி நிா்வாகி குருமூா்த்தி மற்றும் காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்க தலைவா் அ.வின்சென்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.