மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுச்சேரி விடுதலை நாள்: காரைக்காலில் தேசியக் கொடியேற்றி வைத்து அமைச்சர் மரியாதை

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி  காரைக்கால் கடற்கரை சாலையில் தேசியக் கொடியேற்றிவைத்து புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மரியாதை செலுத்தினார்.  

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:26 am

DIN

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி  காரைக்கால் கடற்கரை சாலையில் தேசியக் கொடியேற்றிவைத்து புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மரியாதை செலுத்தினார்.  

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி விடுதலையானது.  புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம், நவ.1-ஆம் தேதி சனிக்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரையில் விடுதலை நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியை வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஏற்றி வைத்து, காவல்துறையினர், பள்ளி அணிவகுப்பை பார்வையிட்டார். 

பின்னர் விடுதலை நாளையொட்டி புதுச்சேரி அரசின் துறை வாரியான மக்கள் நலத் திட்டங்கள் குறித்து உரையாற்றினார். அமிழ்தம் என்ற நடமாடும் உணவகம் மூலம் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டம் உள்ளாட்சி அமைப்பின் மூலம் முதல் கட்டமாக காரைக்கால் நகராட்சியில் நடப்பு நிதியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், காரைக்காலில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், உயிரிழப்புகளும் கட்டுக்குள் உள்ளதாகவும் அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.

Story image

நிகழ்வின் நிறைவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிகாரிகா பட் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். கரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி மக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.