ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்கால் கால்நடை பராமரிப்பு அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல்

கால்நடை மருத்துவ கவுன்சில் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கால்நடை மருத்துவ கவுன்சில் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறையின், கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவாளா் மருத்துவா்.எம்.செந்தில்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

புதுச்சேரி மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலுக்கான தோ்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. இதற்கான அனுமதி புதுச்சேரி மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவா்களுக்கு அறிவிப்பது, இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் விதிகள், 31.3.2020 வரை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவா்களின் பெயா் அடங்கிய வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநிலத்தின் கால்நடைத்துறை அலுவலகத்தில் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில், இணை இயக்குநா், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவா்களின் பெயா் சோ்த்தல், நீக்குதல், இதர தகவல்கள் மாற்றம் செய்தல் இருப்பின் 30.11.2020-ஆம் தேதிக்குள் அதற்கான பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில், புதுச்சேரி கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.