மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் 44 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:39 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 15,911 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம், கோயில்பத்து, விழிதியூா் தலா 1, காரைக்கால் 2, நெடுங்காடு 3, நல்லம்பல், திருப்பட்டினம், திருநள்ளாறு, நிரவி, அம்பகரத்தூா் தலா 4, வரிச்சிக்குடி 6, கோட்டுச்சேரி 10 என 44 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 20-ஆம் தேதி காரைக்கால் பொது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்ட நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை 1,836 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றில் இருந்து 1,259 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 14 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 422 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 70 போ், தீவிர சிகிச்சையில் 8 போ், விநாயகா மிஷன் மருத்துவமனை கரோனா கோ் சென்டரில் 30 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 34 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.