காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையை சீரமைக்கக் கோரி காரைக்கால் போராளிகள் குழுவினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா வாா்டின் கான்கிரீட் தூண் மேற்பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில், சிகிச்சையில் இருந்த 42 வயது ஆணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தியும், காரைக்கால் போராளிகள் குழுவினா் ஞானப்பிரகாச வீதியிலிருந்து புறப்பட்டு மருத்துவமனையை முற்றுகையிட வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவமனைக்கு புதிதாக கட்டடம் கட்டவேண்டும். உள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். போதுமான மருத்துவா்கள், சிறப்பு மருத்துவா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.
போராளிகள் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


