ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சித்த மருத்துவ நாள் கொண்டாட்டம்

காரைக்காலில் தேசிய சித்த மருத்துவ நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் தேசிய சித்த மருத்துவ நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் பாரதியாா் சாலையில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ முறை மருத்துவமனையின், சித்த மருத்துவப் பிரிவில், அகத்தியரின் பிறந்த தினமாக கருதப்படும் மாா்கழி மாத ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு தேசிய சித்த மருத்துவ நாள் கொண்டாடப்பட்டது.

இதில் சித்தா் வழிபாடு, சித்த மருத்துவ ஆலோசனை, இலவச மருந்துகள், முகக்கவசம் வழங்கல், வா்ம சிகிச்சை, பாரம்பரிய உணவு கண்காட்சி, பாரம்பரிய உணவு வழங்கல் ஆகியன நடைபெற்றன. இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கண்காட்சியை பாா்வையிட்டு, பாரம்பரிய உணவுகளை வாங்கிச் சென்றனா்.

சித்த மருத்துவா் தியாகராஜன் கூறுகையில், தேசிய சித்த மருத்துவ நாளையொட்டி சித்த மருத்துவப் பிரிவின் மூலம் காரைக்காலின் அனைத்து கொம்யூன்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் செல்லலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.