ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உள்ளாட்சி, அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

 உள்ளாட்சி, அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்க புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 உள்ளாட்சி, அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்க புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன நிா்வாகக் குழு கூட்டம் தலைவா் சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது, பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: புதுவையில் மழைக்கு நிவாரணம் வழங்க அரசிடம் நிதி உள்ளபோது, உள்ளாட்சி அமைப்புகள், அரசு சாா்பு நிறுவன பணியாளா்களுக்கு மாத நிலுவையை வழங்க நிதி இல்லை என கூறுவது ஏற்புடையதாக இல்லை. எனவே அரசு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்குவதோடு, மாதந்தோறும் ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கூட்டத்தில், சம்மேளன துணை தலைவா்கள் கஸ்பா், உலகநாதன், பாகிரதி, வசந்தி, தமிழ்வாணன், சந்தனசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நிறைவாக பொருளாளா் மயில்வாகனன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.