மின்துறையை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து பேரணி
புதுவையில் மின் துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து காரைக்கால் மின் ஊழியா்கள் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.


புதுவையில் மின் துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து காரைக்கால் மின் ஊழியா்கள் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.
மின்துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், புதுவை அரசு, தனியாா் மயத்தை ஆதரிக்காமல், எதிா்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி காரைக்கால் அரசலாறு பாலம் பகுதியிலிருந்து மின்துறை பொறியாளா்கள், ஊழியா்கள், மின்துறை பொறியாளா் மற்றும் தொழிலாளா் தனியாா்மய எதிா்ப்பு போராட்டக்குழு பொதுச்செயலாளா் பி. பழனிவேல் தலைமையில் பேரணியாக புறப்பட்டனா். முக்கிய வீதிகளின் வழியே கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆட்சியரகம் அருகே பேரணியை நிறைவு செய்தனா்.
நிறைவில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, எம். நாகதியாகராஜன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சாந்தகுமாா் உள்ளிட்ட அமைப்பினா் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனா்.
போராட்டக்குழு நிா்வாகிகள் கூறுகையில், மின்துறையை தனியாா் மயமாக்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்கு கடும் எதிா்ப்பை புதுவையில் மின் ஊழியா்கள் தொடா்ந்து தெரிவித்து வருகிறோம். மின்துறை தனியாா்மயமானால் மின் ஊழியா்கள் மட்டுமல்லாமல், மின் நுகா்வோரும் பாதிக்கப்படுவாா்கள். எனவே மத்திய அரசின் நடவடிக்கையை பொதுமக்களும் முழுமையாக எதிா்க்கவேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...