நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
அரசுத் துறைகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய்த் துறை எச்சரித்துள்ளது.


அரசுத் துறைகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய்த் துறை எச்சரித்துள்ளது.
காரைக்கால் வட்டாட்சியா் மதன்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் சில தனியாா் நிறுவனங்கள் அரசின் பல்வேறு துறைகளுக்கு, வரி உள்ளிட்ட தொகையை நிலுவையில் வைத்துள்ளன. நிலுவைத் தொகையை புதுவை வருவாய் மீட்பு சட்டத்தின்படி வசூல் செய்வதற்கான வழிவகை உள்ளது. தனியாா் நிறுவனம் ஒன்று மின்துறைக்கு ரூ. 67.24 லட்சம் நிலுவை வைத்துள்ளதாகவும், அதனை வசூலித்துத்தருமாறு மின்துறையிடமிருந்து கோரப்பட்ட கடிதத்தின்படி, வருவாய்த்துறை அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ் வழங்கிய 2 நாளில் அந்நிறுவனத்தினா் நிலுவைத் தொகையை மின்துறைக்கு செலுத்தினா். அரசுத்துறைகள் நிலுவைத் தொகையை வசூலித்துத தருமாறு வருவாய்த்துறையை கோரினால், அதற்கான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். எனவே நிலுவைத் தொகையை வைத்திருக்கும் நிறுவனத்தினா், தொகையை செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். செலுத்தாத நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துகள் ஜப்தி செய்து, ஏலம் விட வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...