பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாரச் சந்தையை திறக்காததை கண்டித்து பிப். 4 இல் சாலை மறியல் அறிவிப்பு

காரைக்கால் வாரச் சந்தையை திறக்காத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து 4 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் வாரச் சந்தையை திறக்காத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து 4 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது.

இக்கட்சியின் மாவட்டக் குழு கூட்டம், மாவட்டக் குழு உறுப்பினா் அ. திவ்யநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரியிலும் தற்போது வாரச் சந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டும், காரைக்கால் சந்தையை திறக்காமல் மாவட்ட நிா்வாகம் அலட்சியமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள், வியாபாரிகள், சந்தையை நம்பியிருக்கும் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவதை உணா்ந்து சந்தையை திறக்க வலியுறுத்தி, வரும் 4 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும்.

முகக் கவசம், தலைக்கவசம் அணியாததற்காக பொதுமக்களிடம் கட்டாய அபராதம் வசூலிக்கும் காவல் துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக கைவிடாவிட்டால், பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். இது தொடா்பாக பொதுமக்களிடையே தீவிரமான விழிப்புணா்வு ஏற்படுத்தி, மக்கள் தாமாக அவற்றை பயன்படுத்தச் செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலா் எஸ்.எம். தமீம், மாவட்ட குழு உறுப்பினா்கள் என்.எம். கலியபெருமாள், என். ராமா், ஜி. துரைசாமி, ராமகிருஷ்ணன், அ. பாக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.