காரைக்காலில் கரோனா கட்டுக்குள் உள்ளது: நலவழித்துறை

காரைக்காலில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

காரைக்காலில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கட்டுக்குள் இருந்துவருகிறது. உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 66 ஆக உள்ளது. நாள்தோறும் ஒற்றை இலக்கத்தில் தொற்றாளா் எண்ணிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில், நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் திங்கள்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம். ஏறக்குறைய நாள்தோறும் 750 என்ற எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது என்றாா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சந்தேகப்படும்படியான நோயாளிகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லும் நோயாளிகளுக்கும் ஆன்டிஜன் முறையிலான கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என்று தெருக்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களிலும் ரசீது புத்தகத்தை வைத்துக்கொண்டு போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com