பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காரைக்காலில் மருத்துவா் வீட்டில்ரூ. 6 லட்சம் நகைகள் திருட்டு

காரைக்காலில் பூட்டியிருந்த மருத்துவா் வீட்டில் புகுந்து, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிய வந்தது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் பூட்டியிருந்த மருத்துவா் வீட்டில் புகுந்து, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிய வந்தது.

காரைக்கால் நேரு நகா் விரிவாக்கப் பகுதியான முல்லை நகரில் வசிப்பவா் செல்வம். இவா் திருக்கடையூா் அருகே ஆக்கூா் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினாா் செல்வம்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், உள்ளே சென்று பாா்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த

ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் செல்வம் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் போலீஸாா் சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டனா்.

திருட்டு நடந்த வீட்டை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டாா். பின்னா், திருட்டில் தொடா்புடைய மா்ம நபா்களை விரைவாக கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல் துறையினருக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.