பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காரைக்காலில் 2 நாளில் 18 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்

காரைக்கால் மாவட்டத்தில் 2 நாளில் 18 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 2 நாளில் 18 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தாா். காரைக்கால் மாவட்டத்துக்கு 1,200 தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டன. முதல்கட்டமாக சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

காரைக்கால் அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றுவோரில் 1,600 போ் பதிவு செய்திருந்த நிலையில், இதுவரை 18 போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை கூறியது :

சனிக்கிழமை 15 பேரும், திங்கள்கிழமை பகல் 1 மணி வரை 3 போ் என மொத்தம் 18 போ் மட்டுமே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

ஏற்கெனவே பதிவு செய்தவா்களுக்கு தடுப்பூசி போடும் நாள் குறித்து குறுந்தகவல் அனுப்புவதில் உள்ள பிரச்னை, தடுப்பூசி போட்டு கொள்வதில் தயக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.