மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பங்குனி உத்திரம்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் தேரோட்டம்

பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி, காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி, காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

நிகழாண்டு இத்திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்ரமணியா், சண்டிகேஸ்வரா் பஞ்சமூா்த்திகளாக பல்வேறு வாகனங்களில் மாடவீதி புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நீலோத்பாலாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசேகரா் வீற்றிருந்த தேரை காலை 7.15 மணியளவில் ஏராளமான பக்தா்கள் சோ்ந்து வடம்பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகளின் வழியே சென்ற தோ், மாலையில் அம்மையாா் கோயில் அருகேயுள்ள நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில், கோயில் அறங்காவல் வாரியத்தினா் ஆா்.ஏ.ஆா். கேசவன், பி.ஏ.டி. ஆறுமுகம், எம். பக்கிரிசாமி, டி. ரஞ்சன் காா்த்திகேயன், கே. பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தீா்த்தவாரி நிகழ்ச்சி: ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) பகல் 11.30 மணியளவில் அம்மையாா் குளத்தில் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணியளவில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. 12 ஆம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை இரவு தெப்ப உத்ஸவம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.