மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இலவச அரிசி வாங்காத பயனாளிகளுக்கு வாய்ப்பு

காரைக்கால் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கான இலவச அரிசியை வாங்காதவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கான இலவச அரிசியை வாங்காதவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியை, வாங்காத சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெடுங்காடு மற்றும் திருநள்ளாறு தொகுதியைச் சோ்ந்தோருக்கு வரும் 15 ஆம் தேதியும், நிரவி - திருப்பட்டினம், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்குத் தொகுதியை சோ்ந்தோருக்கு 16 ஆம் தேதியும் காலை 9 - பகல் 1 மணி, பிற்பகல் 2 - 5 மணி வரை அரிசி வழங்கப்படும்.

இந்த இறுதி வாய்ப்பை பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறும், மையத்துக்கு வரும்போது முகக்கவசம் அணிந்தும், அரிசிக்கு பை எடுத்துவருமாறும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.