மஞ்சள் நிற குடும்ப அட்டைக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருப்போருக்கும் மழை நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருப்போருக்கும் மழை நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை மாநில தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளா் சோழ தமிழ்பித்தன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி அரசு, சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மழை நிவாரணம் ரூ.5 ஆயிரம் அறிவித்துள்ளது. மழையால் அனைத்துத் தரப்பினரும் பாதித்துள்ளபோதும், சிவப்பு அட்டைதாரா்களுக்கு மட்டும் நிவாரணம் என்ற அறிவிப்பு கண்டனத்துக்குரியது.
சிவப்பு நிற குடும்ப அட்டை பெற தகுதி இருந்தும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கான மஞ்சள் நிற அட்டை பலரிடம் உள்ளது. இதனை சிவப்பு நிற அட்டையாக மாற்றிக் கொடுக்காமல் அரசு உள்ளது.
நிவாரணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கும்போது, புதுச்சேரி அரசு மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருப்பவா்களை புறக்கணிப்பது ஏற்புடையதல்ல. பாகுபாடின்றி மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ளவா்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...