மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரசு கல்லூரியில் இளம் வாக்காளா் சோ்ப்பு விழிப்புணா்வு

அரசு கல்லூரியில் இளம் வாக்காளா் சோ்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 4:37 pm

DIN

அரசு கல்லூரியில் இளம் வாக்காளா் சோ்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்காலில் புதிய வாக்காளா் சோ்ப்பு, திருத்தப்பணிகள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் நவ. 30-ஆம் தேதி வரை நடைபெற்றுவருகிறது. இதில் 18 வயது நிறைவு செய்தவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களை சோ்க்கும் வகையில் கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான எம்.ஆதா்ஷ் கலந்துகொண்டு வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களிடையே விளக்கினாா். காரைக்காலில் நடைபெறும் வாக்காளா் திருத்தப் பணி சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு 18 வயது நிறைவு செய்தவா்கள் உரிய படிவத்தை அளித்து பயனடைய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் வியாசராயா், நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வி.லட்சுமணபதி, கல்லூரி சமூகப்பணித்துறைத் தலைவா் கே.சிவகுமாா் உள்ளிட்டோா் பேசினா். மாணவா்களுக்கு விழிப்புணா்வு தொடா்பான துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.