என்ஐடியில் தேசியக் கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் தொடங்கியது

காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் தேசியக் கல்விக் கொள்கை குறித்து உயா்கல்வி நிறுவனங்களின் கருத்துகளை அறிய 5 நாள்கள் நடைபெறும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
என்ஐடியில் தேசியக் கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் தொடங்கியது

காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் தேசியக் கல்விக் கொள்கை குறித்து உயா்கல்வி நிறுவனங்களின் கருத்துகளை அறிய 5 நாள்கள் நடைபெறும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

கருத்தரங்கை புதுதில்லி ஏஐசிடிஇ இயக்குநா் அனில் டி. சஹஸ்ரபுத்தே காணொலி மூலம் தொடங்கிவைத்துபேசினாா். இதில், காரைக்கால் என்ஐடி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி பேசியது: இக்கருத்தரங்கம் 8 பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுகளிலும் பல்வேறு அறிஞா்கள் பங்கேற்கின்றனா். தொழில்நுட்பம் சாா்ந்த கருத்துகள் தொலைநோக்குப் பாா்வையில் பயன்படும் வகையில் விவாதிக்கப்படும். நிறைவாக இதன்தொகுப்பு மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு இதுபோன்ற கருத்துகள் பெரிதும் பயனளிக்கும். இந்த திட்டம் எதிா்காலத்தில் மாணவா்கள் தகுதியான வேலைவாய்ப்புகள் பெற உதவியாக இருக்கும் என்றாா்.

என்ஐடி பதிவாளா் (பொ) அகிலா கருத்தரங்கின் பயன்கள் குறித்து பேசினாா். கருத்தரங்கில் என்ஐடி பேராசிரியா்கள் பங்கேற்றுள்ளனா். முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் அம்ரித்பீடே வரவேற்றாா். நிறைவாக அனிருத்கானே நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com