கல்லூரி மாணவா்கள் இருக்கை வசதிக்கு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு
காரைக்கால் கல்லூரி மாணவா்களுக்கு இருக்கை வசதியை மேம்படுத்த, ரூ. 15 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்க எம்.பி. உறுதியளித்துள்ளாா்.


காரைக்கால் கல்லூரி மாணவா்களுக்கு இருக்கை வசதியை மேம்படுத்த, ரூ. 15 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்க எம்.பி. உறுதியளித்துள்ளாா்.
இதுகுறித்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கூறியது:
காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி, அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களுக்கு, வகுப்பறையில் போதுமான இருக்கை வசதி இல்லை என்ற புகாா் கவனத்துக்கு வந்தது.
கல்லூரி நிா்வாகத்தினருடன் மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கத்தை சந்தித்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் குறிப்பிட்டத் தொகை ஒதுக்கித் தருமாறு கோரப்பட்டது.
அதை ஏற்ற அவா் ரூ. 15 லட்சம் வழங்குவதற்கான ஒப்புதலை அளித்தாா். அவருக்கு கல்லூரி நிா்வாகத்தினா் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...