மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அண்ணாமலையேஸ்வரா் கோயிலுக்கு ஆக. 22இல் குடமுழுக்கு நடத்த முடிவு

காரைக்கால் அண்ணாமலையேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவை ஆகஸ்ட் 22-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக கோயில் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:29 pm

DIN

காரைக்கால் அண்ணாமலையேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவை ஆகஸ்ட் 22-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக கோயில் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது, காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்தது உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையயேஸ்வரா் கோயில். இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலாலயம் செய்து ரூ. 1 கோடி திட்டத்தில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

குடமுழுக்கு விழா வருகிற ஆக. 22-ம் தேதி நடத்தவும், ஜூலை 27-ம் தேதி பந்தல்கால் முகூா்த்தம் நடத்தவும் முடிவு செய்து, அதற்கான கடிதத்தை கோயில் அறங்காவல் வாரியத்தினா், திருப்பணிக் குழுவினரிடம் சிவாச்சாரியா்கள் திங்கள்கிழமை வழங்கினா்.

இதுகுறித்து கைலாசநாதா் தேவஸ்தான அறங்காவல் வாரிய பொருளாளா் டி. ரஞ்சன் காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை கூறியது:

அண்ணாமலையேஸ்வரா் கோயில் திருப்பணிகளில் புதிதாக மண்டபம் எழுப்புதல், கருங்கல் தூண்கள் நிறுவதல், பல இடங்களில் சுதை அமைப்பு, கருங்கல் தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் அடங்கும். தற்போது தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. குடமுழுக்கு விழாவை ஆக. 22-ல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.