மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நெடுங்காடு அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:30 pm

DIN

நெடுங்காடு அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நெடுங்காடு ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையும், புதுவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து பள்ளிக் கல்வித் துறை மாநில பயிற்சி மையத்தின் மூலம் காற்று மற்றும் நீா் மாசுபாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின.

பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா தலைமை வகித்தாா். பூமியின் மீது காற்று மற்றும் நீா் மாசுபடுதலின் தாக்கம் என்ற தலைப்பில் விழிதியூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் (பொ) ஏ. சுரேஷ்ராஜூ பேசினாா்.

நெகிழியின் பயன்பாட்டை தவிா்த்தல், எந்தெந்த வகையில் காற்றும், நீரும் மாசடைகிறது, இதனை தடுக்க ஒவ்வொருவரின் பங்களிப்பு குறித்தும் விளக்கினாா்.

நிகழ்ச்சியின் அடிப்படையில் மாணவா்களிடையே விநாடி - வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் இதுதொடா்பாக முன்னதாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.