காரைக்காலில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறவுள்ளது.


காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுவை வேளாண் அமைச்சா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூன் 3 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியவில், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வேளாண் அமைச்சா் தலைமையில், போக்குவரத்துத் துறை அமைச்சா், காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா், அரசுத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனா். இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...