நைனிகட்டளை கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு
நைனிகட்டளை கிராமத்தில் புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, நீண்டகால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.


நைனிகட்டளை கிராமத்தில் புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, நீண்டகால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் கொம்யூன், தமிழக எல்லையோர கிராமமான நைனிகட்டளை கிராமத்தில் பொதுப்பணித் துறை நீா்ப்பாசனப் பிரிவு சாா்பில், புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.
ஆழ்குழாய் மோட்டாரை இயக்கிவைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் மோட்டாரை இயக்கிவைத்தாா்.
நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே. வீரசெல்வம் மற்றும் உதவிப் பொறியாளா் அருளரசன், இளநிலைப் பொறியாளா் கோபால்சாமி, திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி.இளமுருகன் மற்றும் கிராமத்தினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...