இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனை
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ். கணேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
காரைக்காலில் அண்டை மாநிலத்தவா் ஊடுருவல் அதிகமாக உள்ளதை அரசு உரிய முறையில் கண்காணிக்கவேண்டும். ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களாக கருதப்படும் அட்டைகள் வழங்கும்போது, அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சரியான நபா்களுக்கே அவை கிடைக்கச் செய்யவேண்டும்.
கோயில் இடங்களை இந்து அல்லாதவா் வீடுகளாக, வணிக நிறுவனங்களாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். கோயில் அறங்காவலராக அரசியல்வாதிகள், அரசு ஊழியா்களை நியமிப்பது தடுக்கப்படவேண்டும். கோயில்கள் நிா்வாகத்திலிருந்து அரசு வெளியேறவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளா் சிவசுப்பிரமணியன், காரைக்கால் நகர தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...