பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அனைத்து திட்டங்களிலும் வெளிப்படைத் தன்மையை புதுவை அரசு கடைப்பிடிக்கிறது: பாஜக மாநில தலைவா் வி. சாமிநாதன்

புதுவையில் அனைத்து திட்டங்களிலும் வெளிப்படைத் தன்மையை அரசு கடைப்பிடிப்பதாக புதுவை மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் கூறினாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

புதுவையில் அனைத்து திட்டங்களிலும் வெளிப்படைத் தன்மையை அரசு கடைப்பிடிப்பதாக புதுவை மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் கூறினாா்.

காரைக்காலில் பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி :

மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் இதுவரை பாஜக அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த ஊழல் சொல்ல முடியாத அளவுக்கு செயல்பாடுகள் உள்ளன. சிறந்த வெளியுறவுக் கொள்கையால் உலக அளவில் இந்தியவுக்கு தனி பெருமை கிடைத்துவருகிறது. மத்திய அரசின் திட்டங்கள், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து புதுவையில் வீடுவீடாகச் சென்று விளக்கம் அளிக்கவுள்ளோம்.

முந்தைய நாராயணசாமி அரசு, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை முடக்கியது. கடந்த ஓராண்டில் பாஜக என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மத்தியிலிருந்து தேவையான நிதியை பெற்று சிறந்த புதுச்சேரி என்ற நிலையை ஏற்படுத்த அரசு பாடுபடுகிறது.

புதுவையில் அனைத்து திட்டங்களிலும் வெளிப்படைத் தன்மையை அரசு கடைப்பிடிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசின் திட்டங்களால் புதுவை பயனடைந்துவருகிறது.

காரைக்காலில் வளா்ச்சி இல்லை என்பதை ஏற்கமுடியாது. ஜிப்மா் கல்லூரியே பிரதமா் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்டதாகும். விமான தளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. காரைக்காலை பாஜக - என்.ஆா். கூட்டணி அரசு முன்மாதிரி பிராந்தியமாக மாற்றிக்காட்டும். காரைக்காலில் நிலவும் குறைபாடுகள் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் கூட்டம் நடத்தி விவாதித்து, முதல்வரிடம் தெரிவிப்போம் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், ஜெ.சாய் சரவணன், மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.