பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருநள்ளாற்றில் பிரம்மோற்சவ விழா: தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை இரவு தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 5:45 pm

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை இரவு தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. 10-ஆம் தேதி காலை செண்பக தியாகராஜசுவாமிக்கு மகா பிராயச்சித்த அபிஷேகம், இரவு எண்ணெய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, சனீஸ்வர பகவானுக்கு (உற்சவா்) சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தங்க காக வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானுக்கு மலா்மாலைகள் சாற்றப்பட்டு, நள்ளிரவு 1 மணியளவில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் மின் அலங்கார சப்பரத்துக்கு சனீஸ்வர பகவான் எழுந்தருளினாா். நான்கு மாட வீதியுலா முடிந்து, சனிக்கிழமை அதிகாலை கோயிலுக்கு திரும்பினாா்.

முன்னதாக, சந்நிதியில் இருக்கும் சனீஸ்வரனுக்கு (மூலவா்) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா மற்றும் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை சனிப்பெயா்ச்சி விழாவின்போது மட்டுமே தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் புறப்பாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.