காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா
புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா தொடக்கத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொடியுடன் கூடிய பல்லக்கு மற்றும் கண்ணாடி ரதம் புறப்பாடு நடைபெறுகிறது.


புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா தொடக்கத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொடியுடன் கூடிய பல்லக்கு மற்றும் கண்ணாடி ரதம் புறப்பாடு நடைபெறுகிறது.
இறைதூதரில் சிறப்புக்குரியவராக கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாவின் நினைவாக காரைக்காலில் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கந்தூரி விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 199-ஆம் ஆண்டு கந்தூரி விழாவாகும்.
இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பின்னர் 22-ஆம் தேதி மின்சார சந்தனக்கூடு புறப்பாடு நடைபெற்று, வலியுல்லாவின் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி, ஹலபு என்னும் போர்வை போர்த்தப்படுகிறது. பிறகு 25-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.

இவ்வாறாக நடைபெறும் விழா தொடக்கமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துக்காக பிற்பகல் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடி ஊர்வலமாக கொண்டுசெல்லப்படுகிறது. ஊர்வலத்தில் மக்களை மகிழ்விக்கும் வகையில் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட வண்ண ரதங்கள், சிறுவர்கள், இளைஞர்கள் வடிவமைத்த கப்பல் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகின்றன.

முக்கிய வீதிகளின் வழியே பேண்டு வாத்தியங்கள் முழங்க கொடியுடன் கூடிய பல்லக்கு, ரதங்கள் இரவு தர்கா அருகே சென்றடைந்து, தர்கா அருகே உள்ள பிரதானக் கம்பத்திலும், மினராக்களிலும் இரவு கொடியேற்றப்படுகிறது. உள்ளூர், வெளியூரிலிருந்து ஏராளமான மக்கள், அழகிய ரதங்களை காணவும், கொடியேற்ற விழாவில் பங்கேற்கவும் வந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...