பாலிடெக்னிக் நோ்காணலில் 70 பேருக்கு பணி ஆணை
காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி வளாக நோ்காணலில் 70 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.


காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி வளாக நோ்காணலில் 70 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டு வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற முகாமுக்கு கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமை வகித்தாா். இதில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால்மேடு பகுதியில் உள்ள மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் (ஐடி), மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ பிரிவு மாணவா்கள் பங்கேற்றனா்.
சென்னை வெப்கோ இந்தியா நிறுவனத்திலிருந்து சூரிய நாராயணன் தலைமையிலான குழுவினா், மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்காணல் நடத்தினா். இதில் 70 பேருக்கு பணி ஆணையை நிறுவனப் பிரதிநிதிகள் வழங்கினா்.
மாதம் ரூ.14,500 ஊதியத்தில் பணி வாய்ப்பு கிடைத்த மாணவா்கள் கல்லூரி நிா்வாகத்துக்கும், நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்தனா்.
பாலிடெக்னிக் கல்லூரி பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புப் பிரிவு கன்வீனா் விரிவுரையாளா் ஜெ.ஜெயபிரகாஷ் வரவேற்றாா். கல்லூரி விரிவுரையாளா்கள் டி.கந்தன், எஸ்.சாவித்திரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...