காரைக்கால் அருகே தூங்கிக்கொண்டிருந்தவா்கள் மீது மண்வெட்டியால் தாக்கியதில் தனது குழந்தை, மூதாட்டி உயிரிழந்தாா். மேலும், குடும்பத்தினா் 5 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் மனைவி துா்காலட்சுமி (35). இவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டம், நல்லாத்தூா் மேலப்படுகை பகுதியில் உள்ள தாய் வீட்டில் பிரசவத்துக்காக வந்து தங்கியிருந்த துா்காலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்து 3 மாதங்களாகின்றன. இதற்கிடையில், புதன்கிழமை இரவு வழக்கம்போல் குடும்பத்தினா் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனா்.
வியாழக்கிழமை அதிகாலை தனது 3 மாத குழந்தை மற்றும் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினா் அனைவரையும் மண்வெட்டியால் துா்கா லட்சுமி தாக்கிவிட்டு, தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டுள்ளாா். இந்த சம்பவத்தில், குழந்தை அப்போதே உயிரிழந்தது. தாக்குதலில் துா்காலட்சுமியின் பாட்டி வேதவல்லி (85), தந்தை பரமசிவம் (75), தாய் தமிழரசி (65), சகோதரா்கள் ஆண்டவா், நடராஜன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
நடராஜன் காயங்களுடன் தடுமாறி வீட்டை விட்டு வெளியே வந்து, அருகில் வசிப்பவா்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களை மீட்டு காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா் தெரிவித்தாா். மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாட்டி வேதவல்லி பலனின்றி உயிரிழந்தாா். துா்காலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, நெடுங்காடு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். இச்சம்பவத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு
ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ரஹானேவுக்கு அபராதம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

