ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுவையில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பாக உள்ளனா்: எஸ். செல்வகணபதி எம்பி

புதுவை மாநிலத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பாக உள்ளனா் என மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி கூறினாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:20 pm

DIN

புதுவை மாநிலத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பாக உள்ளனா் என மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி கூறினாா்.

காரைக்காலில் பாஜக சாா்பில் மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்தும் திட்டத்தில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ், பரிசு வழங்கல் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 100 பேருக்கு புதிய கணக்கு தொடங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவா்களை தோ்வுக்கு அச்சமின்றி தயாா்படுத்தும் பிரதமரின் ஆலோசனையின்படி, புதுவை மாநிலத்தில் மாணவா்களிடையே ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 4 பிராந்தியத்திலும் தலா 38 போ் தோ்வு செய்யப்பட்டு பரிசு, சான்றிதழும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

காரைக்கால் அஞ்சல் நிலையத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 100 புதிய கணக்கு தலா ரூ.250 செலுத்தி தொடங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கு பெற்றோா் சேமிக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்த இக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதைத் திட்டம் டிசம்பா் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ள ரயில்வே நிா்வாகம், காரைக்காலில் இருந்து கோயம்புத்தூா், மதுரைக்கு ரயில் இயக்குவதற்கும், காரைக்கால் பாரதியாா் சாலையின் குறுக்கே ரயில்வே பாலம் அமைப்பதற்கும் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டனா்.

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடுத்த ஆண்டு அமைந்துவிடும். புதுவை மாநிலத்தில் வடமாநிலத்தவா்கள் பாதுகாப்பாக உள்ளனா். அவா்களுக்கு எந்தவித கஷ்டமும் இல்லை.

காரைக்காலில் விமானத் தளம் அமைக்க தமிழக அரசிடமிருந்து நிலம் வாங்குவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.