பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற பந்தல்கால் நடும்  நிகழ்வில் பங்கேற்ற நிா்வாக அதிகாரி  கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோா்.
பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற பந்தல்கால் நடும் நிகழ்வில் பங்கேற்ற நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோா்.

அம்பகரத்தூா் மகிஷ சம்ஹார நினைவுத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

அம்பகரத்தூா் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் மகிஷ சம்ஹார நினைவு பெருந்திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில், நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் அம்பாள் புறப்பாடு, தோ், புஷ்பப் பல்லக்கு, மகிஷ சம்ஹாரத்தை நினைவுகூரும் விதமான வழிபாடுகள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் பந்தல்காலுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு நடப்பட்டது.

இதில், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜெ. மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இத்திருவிழாவுக்கு முன்பாக இக்கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் உற்சவம் நடைபெறுகிறது. விழா தொடக்கமாக பூச்சொரிதல் வழிபாடு ஏப். 29-ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது. ஏப். 30-ஆம் தேதி ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு பூா்வாங்க அபிஷேகமும், மே 1-ஆம் தேதி பத்ரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com