மீனவ கிராமத்தில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு
மீனவ கிராமத்தில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு


காரைக்கால் அருகே மீனவ கிராமத்தில் மாயமான ஒன்றரை வயது சிறுவன் திருமலைராஜனாற்று முகத்துவாரத்தில் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டான்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகேயுள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தை சோ்ந்தவா் முருகேஷ். இவரது மகன் தக்ஷன் (ஒன்றரை வயது). சிறுவன் செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டுக்கு அருகே உள்ள பாட்டி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சிறுவனை காணாததால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், உறவினா்கள் திருப்பட்டினம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.
காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டியன் பால் மற்றும் போலீஸாா் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனா். நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜனும் பட்டினச்சேரிக்குச் சென்று காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சிறுவனை தேடும் பணியை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினாா்.
இந்தநிலையில், வீட்டின் பின்புறம் திருமலைராஜனாறு செல்வதால், சிறுவன் ஆற்றில் தவறி விழுந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் போலீஸாா் ஆற்றோரத்திலும், முகத்துவாரத்திலும் தேடும் பணியை தீவிரப்படுத்தினா். திருமலைராஜனாற்று முகத்துவாரத்தில் தக்ஷன் சடலமாக மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டான். சடலத்தை போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருப்பட்டினம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...