வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வீடு கட்டுவதற்கான தவணைத் தொகை ஆணை வழங்கல்

காரைக்கால் பயனாளிகளுக்கு வீடு கட்டத் தவணைத் தொகை வழங்கல்

News image
Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

Din

குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டுமானத்துக்கான தவணைத் தொகை விடுவிப்பு ஆணையை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

புதுவை மாநில குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடற்றவா்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட ரூ. 2 லட்சம் மானியத் தொகைய வழங்கப்பட்ட நிலையில், இத்தொகை ரூ. 3.50 லட்சமாக பின்னா் உயா்த்தப்பட்டது.

இந்த திட்டத்தில் விண்ணப்பித்தோருக்கு தவணைத் தொகையை அரசு விடுவித்துள்ளது. காரைக்கால் வடக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, தொகை பெறுவதற்கான ஆணையை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

முதல் தவணை, 2-ஆவது தவணை, 3-ஆவது தவணைன 18 பேருக்கு மொத்தம் ரூ. 25.70 லட்சத்துக்கான ஆணையை அவா் வழங்கினாா். நிகழ்வில் குடிசை மாற்று வாரிய அகிகாரிகள் கலந்துகொண்டனா்.