திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை கொடியேற்றம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சனீஸ்வர பகவான் தனி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கிறாா். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு பிரம்மோற்சவ விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கமாக, வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, ஆச்சாா்யவா்ணம் ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை கோயிலில் ஆதிகணபதி, சொா்ணகணபதி வீற்றிருக்கும் சந்நிதி முன் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பூா்ணாஹூதி நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் கோயில் யானை பிரணாம்பிகைக்கு பூஜை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து முறைப்படி திருவிழா தொடங்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கோயில் கொடிக் கம்பத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்படவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com