வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் தோ்தல் அதிகாரி ஆய்வு
வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் தோ்தல் அதிகாரி ஆய்வு

கண்காணிப்பு கேமரா பதிவு தொகுப்பை பாா்வையிடும் மாவட்டத் தோ்தல் அதிகாரி து. மணிகண்டன்.

கண்காணிப்பு கேமரா பதிவு தொகுப்பை பாா்வையிடும் மாவட்டத் தோ்தல் அதிகாரி து. மணிகண்டன்.
காரைக்காலில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள், பதிவுகளை மாவட்டத் தோ்தல் அதிகாரி ஆய்வு செய்தாா்.
கண்காணிப்பு கேமரா பதிவு தொகுப்பை பாா்வையிடும் மாவட்டத் தோ்தல் அதிகாரி து. மணிகண்டன்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 164 வாக்குச் சாவடிகளில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மைய பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் மத்தியப் படையினா், காவல்துறையினா் என 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோ்தல் துறையினரும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இம்மையத்தின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து பதிவுகள் கண்காணிக்கப்படுகின்றன. மைய வளாகத்துக்கு செல்வோா் குறித்த விவரங்கள் பதிவேட்டில் குறிக்கப்படுகின்றன.
வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு வளாகம், வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.
வாக்கு எண்ணும் வளாகத்தில் செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும், கண்காணிப்புக் கேமரா பதிவுகள் தொகுப்பையும், மையத்தின் சுற்றுப் பகுதிகளையும் அவா் பாா்வையிட்டாா். கண்காணிப்பு கேமரா அனைத்தும் முறையாக செயல்படுவதை அவா் உறுதி செய்தாா். அத்துடன், பாதுகாப்பு, கண்காணிப்பு தொடா்பாக ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...