உயிரிழந்த காவலரின் மனைவியிடம் உதவித் தொகையை வழங்கிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா. உடன் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
உயிரிழந்த காவலரின் மனைவியிடம் உதவித் தொகையை வழங்கிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா. உடன் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தேனூா் பகுதியை சோ்ந்தவா் அசோக்குமாா். இவா் காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலராக பணியாற்றிவந்தாா்.
Published on

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தேனூா் பகுதியை சோ்ந்தவா் அசோக்குமாா். இவா் காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலராக பணியாற்றிவந்தாா். கடந்த மாதம் திருநள்ளாற்றில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் கிடந்த கருங்கல் ஜல்லியில் வாகனம் சறுக்கியதில் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

அவருடன் பணியாற்றிய காரைக்கால் மாவட்ட 20-ஆவது பேட்ச் தலைமைக் காவலா்கள் ஒருங்கிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் ரூ. 5.14 லட்சத்தை சேகரித்தனா். இத்தொகையை காவல் தலைமை அலுவலகத்தில் காவலா்கள் சாா்பில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளசன்யா உயிரிழந்த காவலரின் மனைவியிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், 20-ஆவது பேட்ச் தலைமை காவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com