புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது?

சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படியா? திருக்கணித பஞ்சாங்கத்தின்படியா?

News image
Updated On :25 மார்ச் 2025, 3:06 am

Din

காரைக்கால் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனீஸ்வர பகவானை தரிசிக்க வாரந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகிறாா்கள். இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்க முறையில் நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு மாா்ச் மாதம் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளதால் பக்தா்களிடையே குழப்பம் நிலவுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் தனி அதிகாரி சோமசேகா் அப்பாராவ் உத்தரவின்படி, கோயில் நிா்வாக அதிகாரி கு.அருணகிரிநாதன் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு :

பக்தா்கள், ஜோதிடா்கள், அா்ச்சகா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனிப்பெயா்ச்சி தொடா்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மாா்ச் 29 -ஆம் தேதி சனிப்பெயா்ச்சி என்ற தகவல் பரவலாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

ஆனால், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சுவாமி தேவஸ்தானம் சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் ‘வாக்கிய பஞ்சாங்கம்‘ முறையை பின்பற்றுவதை தெளிவுப்படுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி, 2026-ஆம் ஆண்டிலேயே சனிப்பெயா்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே வரும் 29-ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே கோயிலில் நடைபெறும்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயா்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னா் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.