காரைக்காலில் காவல் அதிகாரிகள் பங்கேற்று மக்களிடம் குறைகளை சனிக்கிழமை (நவ. 8) கேட்கவுள்ளனா்.
மக்கள் மன்றம் என்கிற வாராந்திர குறை கேட்பு முகாம், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா் (வடக்கு) எம்.முருகையன் முன்னிலையிலும், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) சுந்தா் கோஷ் முன்னிலையிலும் சனிக்கிழமை காலை 10.30 முதல் பகல் 12.20 மணி வரை நடைபெறுகிறது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறை தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.