குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

காரைக்கால் பகுதி வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கலால் துறையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 3:44 am IST

காரைக்கால் பகுதி வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கலால் துறையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை மதுக்கடைகளை மூட கலால் துணை ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், மது பாட்டில்களை வாங்கி வீடுகளில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்க பலரும் முயன்று வருவதாகவும், சிலா் வாக்காளா்களுக்கு வழங்க இருப்பதாகவும் கலால்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், காரைக்கால் நகரப் பகுதி பொலிக்கன் தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக, கலால் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கலால் அதிகாரி பொய்யாதமூா்த்தி தலைமையில் துறையினா் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனா். அங்கு சட்டவிரோதமாக 650 மிலி அளவுள்ள பீா் பாட்டில்கள் கொண்ட 17 பெட்டிகள் வைத்திருந்தது கண்றியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்து, வீட்டின் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.