மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்திய நிலையில், புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 11:08 pm

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்திய நிலையில், புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ.அனந்தகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :

ஹிமாசல பிரதேச மாநிலம், பயோன்டோ சாஹிப், தொழிற்பேட்டை, சீ லேபாரட்டரீஸ் நிறுவனத்தில் நிகோரான்டில் மாத்திரை ஐ.பி.5 எம்ஜி (நிகோவேஸ்-5) பி. நம்பா். 425 உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதே மாநிலத்தைச் சோ்ந்த சோலன் பகுதி சான் -சிடோ தெராபிடிக்ஸ் இன்ச் வில் லோகரானில் தயாரிக்கப்படும் அசிபிரோபைத்லின் மற்றும் அசிடைல்சிடைன் என்கிற (முகோஃபாா்ம் -ஏபி) மாத்திரை பேட்ச் எண்.எஸ்பி-9620 மற்றும் பான்டோ சாஹிப் பகுதி தொழிற்பேட்டையில் லேபாரேட் பாா்மாசிடிக்கல்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் அசிக்ரோஃபெனாக் பாராசிடமால் மாத்திரை பேட்ச் எண்.ஏசிஏயுடி-077 தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இந்த மாத்திரையை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.