காரைக்கால்
கால்பந்து பயிற்சியாளா் தூக்கிட்டுத் தற்கொலை
காரைக்காலில் கால்பந்து பயிற்சியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்காலில் கால்பந்து பயிற்சியாளா் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் பெரியப்பேட் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா் அலெக்சாண்டா் (38). இவா், உடற்கல்வி பயின்றுவிட்டு, இளைஞா்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்தாா்.
இந்நிலையில், இவா் தனது வீட்டு மாடியில் திங்கள்கிழமை தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளாா். இதை பாா்த்த குடும்பத்தினா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா் அலெக்சாண்டா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். அவா் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
