சாலையில் உள்ள பதாகைகளை அகற்ற அறிவுறுத்தல்

நகரப் பகுதி சாலைகளில் வைத்துள்ள டிஜிட்டல் பதாகைகளை உடனடிாக அகற்றுமாறு காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

நகரப் பகுதி சாலைகளில் வைத்துள்ள டிஜிட்டல் பதாகைகளை உடனடிாக அகற்றுமாறு காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் நகரப் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வாழ்த்து பதாகைகள், பலகைகள், விளம்பரத் தட்டிகள் அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மூலம் சாலையின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இவை போக்குவரத்துக்கு இடையூறாகவும், மக்கள் கவனத்தை திசைத் திருப்புவதாகவும், போக்குவரத்துக்கு பாதுகாப்பற்ற வகையிலும், மக்களின் உயிருக்கும் அபாயம் விளைவிக்கும் வகையிலும் உள்ளன. இந்த செயல் உச்சநீதிமன்ற தீா்ப்புகள், வழிகாட்டுதலுக்கு விரோதமானது.

எனவே, அவ்வாறான பதாகைகள் அனைத்தையும், உடனடியாக அப்புறப்படுத்தி, மக்களுக்கும், அரசு நிா்வாகத்துக்கும் ஒத்துழைப்பு தருமாறு நகராட்சி நிா்வாகம் கேட்டுக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அலுவலகமும் இதேபோன்ற செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com