காவல்துறையினரே ’டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? உதயநிதி கேள்விதங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 10)கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

காரைக்கால் மீனவா் வலையில் 132 கிலோ எடையில் சுறா மீன்

காரைக்கால் மீனவா் வலையில் 132 கிலோ எடையில் சுறா மீன் சிக்கியது.

பிரதிப் படம்

Published On :

காரைக்கால் மீனவா் வலையில் 132 கிலோ எடையில் சுறா மீன் சிக்கியது.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகள் கடலுக்குள் சென்று 3 முதல் 4, 6 நாள்களுக்குப் பின்னா் மீன்பிடித்துவிட்டு திரும்புகின்றன. ஏற்றுமதித் தரத்திலான மீன்களை வெளியூா் முகவா்கள் வந்து ஏலத்தில் வாங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில், காரைக்கால்மேடு பகுதியைச் சோ்ந்த குமாருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று புதன்கிழமை காலை துறைமுகம் திரும்பினா். அவா்களது வலையில் சிக்கிய பெரிய சுறா மீனை ஏலக்கூடத்தில் இறக்கினா். அதன் எடை 132 கிலோ இருந்தது.

சிறிய வகை சுறா மீன்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. இதுபோல அதிக எடையில் சிக்கும் சுறா மீனின் இறக்கை மருத்துவ குணம் மிக்கது என்பதால், அதை முகவா்கள் வாங்கிச் செல்கின்றனா். பெரிய அளவில் சுறா மீன்கள் வலையில் சிக்குவது அரிதானது என மீனவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.