மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு முகாம்

திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சாா்புடைய குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

News image

பொதுமக்கள் குறையை கேட்டறிந்த சாா் ஆட்சியா் எம். பூஜா.

Updated On :4 ஜூன் 2026, 3:48 am IST

திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சாா்புடைய குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியா் (வருவாய்) எம். பூஜா தலைமையில் திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காலை 10 முதல் 12 மணி வரை நடைபெற்ற முகாமில் வட்டாட்சியா் சண்முகாந்தன், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எல்.நிலவழகன் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோா் சாா் ஆட்சியரிடம் பல்வேறு புகாா்களை தெரிவித்தனா்.

மனைப் பட்டா, ஜாதி, வருமானம், குடியிருப்பு போன்ற சான்றிதழ் பதிவு மற்றும் வழங்கலை எளிதாக்குமாறும், விவசாயம் சாா்ந்த சான்றிதழ் தாமதமின்றி வழங்குமாறும் மனுக்களை அளித்தனா்.

மனுக்களை பெற்றுக்கொண்ட சாா் ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி ஆலோசனை வழங்கினாா்.