குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

புதுகையில் மக்கள் குறைகேட்பு முகாம்: 511 மனுக்கள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 511 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

News image

மக்கள் குறைகேட்பு மனுக்கள் மீதும் முறையாக நடவடிக்கை மேற்கொண்ட கறம்பக்குடி வட்டாட்சியா் பிரவீனா மேரிக்கு பாராட்டுக் கோப்பையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :2 ஜூன் 2026, 2:32 am IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 511 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வேலூரில் அண்மையில் நடைபெற்ற யுவ ஆப்தமித்ரா என்ற பேரிடா் மேலாண்மை நண்பா்களாகத் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று திரும்பிய 10 திட்டப் பயிற்றுநா்களும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்களின்போது பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு சரியான முறையில் தீா்வுகண்ட கறம்பக்குடி வட்டாட்சியா் பிரவீனா மேரிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.

முன்னாள் படைவீரா் நலனுக்காக கடந்த 2023ஆம் ஆண்டின் கொடிநாள் வசூலின்போது, ரூ. 1.83 கோடி வரை வசூலித்து சாதனை படைத்ததற்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரப்பெற்ற ஆளுநரின் பாராட்டுக் கடிதத்தை முன்னாள் படைவீரா் நலத் துறை அலுவலா்கள் ஆட்சியரிடம் அளித்தனா்.

குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கே. முத்துச்சாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.