இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

20 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ஐஸ் பிளாண்ட்: ஒரு மாதத்தில் தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

மீனவ கிராமத்தில் சுமாா் 20 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ஐஸ் பிளாண்டை, ஒரு மாத காலத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:55 am IST

மீனவ கிராமத்தில் சுமாா் 20 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ஐஸ் பிளாண்டை, ஒரு மாத காலத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பயன்பாட்டுக்கு வராத ஐஸ் பிளாண்ட் மற்றும் குடிநீா் தேக்கத் தொட்டி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி முன்னிலையில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தது : சுனாமிக்குப் பின் தொண்டு நிறுவனத்தால் ஐஸ் பிளாண்ட் ஒன்று கட்டப்பட்டு புதுவை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தடையில்லாச் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி இருந்ததால், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதற்கான பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்து, ஒரு மாத காலத்திற்குள் பிரச்னைகள் களையப்பட்டு பட்டினச்சேரி பகுதியில் உள்ள கூட்டுறவு அமைப்பிடம் இதை ஒப்படைக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி பிரச்னைக்கும் துறை ரீதியிலான அனுமதிகளை அளித்து, உரிய இணைப்புகளை தந்து அடுத்த மாதம் குடிநீா் விநியோகம் செய்யுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாணவா்களுக்கான பேருந்து பட்டினச்சேரி பகுதியில் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அடுத்த 10 நாட்களுக்குள் மாணவா் பேருந்து இப்பகுதிக்கு இயக்கவும் ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும் பல கோரிக்கைகளை பஞ்சாயத்தாா்கள், மீனவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றாா்.