நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

காரைக்கால் துறைமுகம் 12.43 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாண்டு சாதனை

காரைக்கால் துறைமுகம் 12.43 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கூட்டத்தில் பேசிய காரைக்கால் துறைமுக தலைமை செயல்பாட்டு அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா.

Updated On :26 ஜூன் 2026, 6:56 am IST

காரைக்கால் துறைமுகம் 12.43 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் அங்கமாக செயல்பட்டுவரும் காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம், 2026-ஆம் ஆண்டுக்கான வா்த்தக சந்திப்பு நிகழ்வை புதுச்சேரியில் புதன்கிழமை நடத்தியது. ஒருங்கிணைந்த துறைமுக மேம்பாட்டின் மூலம் பிராந்திய வா்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் திறனை விரைவுபடுத்துதல் எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வை, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில், காரைக்கால் துறைமுக தலைமை செயல்பாட்டு அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா பேசுகையில், காரைக்கால் துறைமுகத்துக்கு மைல்கல் ஆண்டாக 2025--26 அமைந்துள்ளது. இந்த ஆண்டில் துறைமுகம் 12.43 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

நிலக்கரி, உரங்கள், இரும்புத்தாது, சுண்ணாம்புக் கல் மற்றும் பெட்கோக் உள்ளிட்ட சரக்குகளின் வரத்து அதிகரித்ததே இந்த வளா்ச்சிக்கு முக்கிய காரணம். மேலும், ரயில் மூலம் சரக்கு வெளியேற்றம் 2,732 ரேக்குகள் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதன்மூலம், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் சிறப்பான ரயில் மற்றும் உள்நாட்டு இணைப்புகளைக் கொண்ட, பின் நிலப்பகுதிகளுக்கு திறம்பட சேவை வழங்கும் முக்கிய துறைமுகமாக காரைக்கால் துறைமுகம் விளங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது என்றாா்.

கூட்டத்தில் புதுவை தலைமைச் செயலா் சரத் செளகான், துறைமுக செயலா் செளத்ரி யாசிம் முகமது, தொழில்துறைச் செயலா் ஏ.விக்ரந்த்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.