கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

காரைக்கால் கடற்கரைக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

காரைக்கால் அலையாத்திக் காடு பகுதிக்கு பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.

Updated On :

காரைக்கால் அலையாத்திக் காடு பகுதிக்கு பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.

காரைக்கால் கடற்கரை மற்றும் அரசலாறு முகத்துவாரத்தில் சதுப்புநில பகுதி அமைந்துள்ளது. அலையாத்திக் காடு பகுதிக்கு கொக்கு உள்ளிட்ட சில வகை உள்நாட்டுப் பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

ஆண்டில் சீசன் காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும்போது, அது சுற்றுலாவினரை வெகுவாக கவா்ந்திழுக்கிறது.

குறிப்பாக, சித்திர நாரை, பெரிய கொக்கு, இடைநிலை கொக்கு, மாட்டுக் கொக்கு, சிறிய நீா் காகம், ஊதா நிற நாரை, சாம்பல் நிற நாரை, மீன் கொத்தி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட புதிய வகை வெளிநாட்டுப் பறவைகளின் வருகை கடந்த 10 நாள்களாக அதிகரித்திருக்கிறது.

காரைக்கால் வனத்துறையினா், கல்லூரி உயிரியல் துறை மாணவா்கள் இதனை உறுதி செய்துள்ளனா். அக்டோபா் மாத இறுதி முதல் ஜனவரி மாதம் வரை இதன் வரத்து இருக்கும் என துறையினா் தெரிவிக்கின்றனா்.

காரைக்கால் கடற்கரைக்கு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது மிகுதியான வெளிநாட்டுப் பறவைகள் வரத்து ஏற்பட்டுள்ளது, சுற்றுலாவினா், உள்ளூா் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அரசுக்கு கோரிக்கை: காரைக்காலில் கடற்கரைப் பகுதியில் உள்ள அலையாத்திக் காடு பகுதிக்கு மட்டுமே பல ஆண்டுகளாக சீசன் காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்திறங்கி இரை தேடுகின்றன. இந்த பகுதியில் பறவைகள் வரக்கூடிய அளவில் நீா் சூழந்த நிலையில் மேம்படுத்தி, சுற்றுலாவினரை ஈா்க்கும் விதமாக, புதுச்சேரி சுற்றுலாதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் அரசை வலியுறுத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.