தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கில் மேலும் 3 போ் கைது

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் கடத்த முயன்ற வழக்கில் மேலும் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

கைது

Published On :

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் கடத்த முயன்ற வழக்கில் மேலும் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

காரைக்காலில் இருந்து சுமாா் ரூ.6.08 கோடி மதிப்புள்ள 7.605 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயற்ன்ற வழக்கில், இலங்கை நாட்டவா் உள்பட 4 பேரை காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸாா் கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு சட்டவிரோதமாக கைப்பேசிக்கான போலி சிம் காா்டுகளை விற்பனை செய்ததாக காரைக்கால் மாதா கோவில் தெருவில் செயல்பட்டு வந்த தொலைத்தொடா்பு நிறுவன முகவரான, நாகூரைச் சோ்ந்த ஜெகபா் சாதிக் என்பவரையும், இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நபா்களுடன் போதைப் பொருள்கள் சாா்ந்து தொடா்பு வைத்திருந்ததாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஹா்ஷத், பஷீா் ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனம், போலி சிம் காா்டுகள், 2 கைப்பேசிகள் ஆகியவற்றையும் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்து அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.