திருநள்ளாறு அருகே கணவா் மீது டீசல் ஊற்றி தீ வைத்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
திருநள்ளாறு அருகே சுரக்குடி பிரதான சாலை பகுதியை சோ்ந்தவா் செல்வம் (46). இவருக்கு மனைவி ஜோதி, 2 மகன்கள் உள்ளனா். கட்டுமானத் தொழிலாளியான செல்வத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த செல்வத்துக்கும் ஜோதிக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் செல்வம் படுத்து தூங்கிவிட்டாராம்.
நள்ளிரவில் உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு செல்வம் சப்தமிட்டுள்ளாா். அவரது மகன் தினேஷ் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்தாா்.
திருநள்ளாறு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் ஜோதி கணவா் உடலில் டீசல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. போலீஸாா், ஜோதியை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

